சோதனைச் சாவடிகளில் சோதனை... லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பறிமுதல்
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் மாநில எல்லைப் பகுதியில் காவல் மற்றும் போக்குவரத்து அலுவலக (RTO) சோதனைச்சாவடிகள் இயங்கி வருகிறது.இங்கு வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கும் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்கள் செல்லும் வாகனங்களுக்கு பெர்மிட் வழங்க 200 முதல் 1000 ரூபாய் வரை லஞ்சம் வாங்குவதும் காவல்துறை சோதனை சாவடியிலும் அதிக பாரத்துடன் வரும் வாகனங்களை அனுமதிக்க 1000 முதல் 5000 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை இந்த நிலையில் இன்று காலை திடீரென மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர் எழுந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை இன்று மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.
தென்காசி மாவட்டம் தமிழக கேரள எல்லையான புளியரையில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வாராத 48,270 ரூபாய் பணம் பறிமுதல். மோட்டார் வாகன ஆய்வாளர் நீலவேணி மற்றும் 2 புரோக்கர்கள் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக கேரள எல்கையான படந்தால்மூடு சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறை டி எஸ் பி மதியழகன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
காட்பாடி தமிழக ஆந்திர எல்லையில் சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.94 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல்.இதில் லஞ்சப்பணம் ரூ.94 ஆயிரத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் சோதனைச்சாவடியில் கணக்கில் வராத ரூ. 16 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இரண்டு சோதனைச் சாவடியில் ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் கணக்கில் வராத 72, 800 ரூபாய் ஓசூரில் இரண்டு சோதனை சாவடிகளில் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.