ரஜினிகாந்த்துக்கு திமுக தலைவர் பிறந்த நாள் வாழ்த்து..
இன்று (12-12-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள், நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தொலைப்பேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டேன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த தினம் இம்முறை அவரது அரசியல் பிரவேச அறிவிப்புடன் வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இம்மாதம் 31ம் தேதி புதிய கட்சிக்கான தேதி அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சியைத் தொடங்கப் போவதாகவும் ஏற்கனவே ரஜினி தெரிவித்திருக்கிறார்.ரஜினிக்குக் காலையிலேயே பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நடிகர் சிரஞ்சீவி எனப் பல முக்கியஸ்தர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.