L scheme டிப்ளமோ மாணவர்களுக்கான Equivalent subject பற்றிய செய்தி!

தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் டிப்ளமோ மாணவர்களுக்கான இந்த பருவத்திற்கான Oct/Nov2020 தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்களின் கல்வி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் இணைய வழியில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்பருவத் தேர்வும் இணையவழியில் மட்டுமே நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த பருவத்தேர்வில் இதற்கு முன்னர் பல்வேறு பாடத் திட்டங்களில்(J,K மற்றும் L குறிப்பிட்ட சிலர் மட்டும்) படித்த மாணவர்களுக்குக் கருணை அடிப்படையில் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத் திட்டங்கள் முடியும் போது அதற்கான இணையான பாடத்திட்டங்கள் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் வெளியிடப்படும். அந்தவகையில் M scheme பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் உள்ளவாறு மற்ற பாடத் திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.

மாணவர்களின் எளிமை கருதி L scheme மாணவர்களுக்கான இணை பாடத் திட்டத்தை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/LtoM-(1).pdf

More News >>