அடுத்த மெகா வங்கி மோசடி - 2ஆயிரம் கோடி அளவில் அம்பேல்!
குஜராத் மாநிலம் வதோதராவில் செயல்பட்ட டைமண்ட் பவர் இன்பிராஸ்டிரக்சர் நிறுவனத்தின் உரிமையாளர்களும், மற்றும் பெயர் தெரியாத நிலையில் உள்ள 11 பொது ஊழியர்களும் 2,654 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளார்கள்.
மத்திய பாஜக மோடி ஆட்சியில் வங்கி முறைகேடு என்பது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. நீரவ் மோடியின் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி, ரோட்டோமேக் நிறுவனத்தின் வங்கிக் கடன் மோசடி, கனிஷ்க் நிறுவன கடன் மோசடி ஆகியவற்றை அடுத்து இப்போது இந்நிறுவனத்தின் மோசடி வெளி உலகத்திற்குத் தெரிய வந்திருக்கிறது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரத்தில் செயல்பட்டு வந்த டைமண்ட் பவர் இன்பிராஸ்டிரக்சர் நிறுவனத்தின் உரிமையாளர்களும், மற்றும் பெயர் தெரியாத நிலையில் உள்ள 11 பொது ஊழியர்களும் 2,654 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளார்கள்.
2016ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த நிறுவனம் வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை 2,654.40 கோடி ரூபாய். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பொதுத் துறை மற்றம் தனியார் வங்கிகள் என மொத்தம் 11 வங்கிகளின் அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளது.
இது தவிர, வங்கிகளிடம் கடன் பொறுப்பேற்பு அதிகரித்தது. கடன் திரும்பி வராததால் வங்கிகள் அவற்றை வாராக்கடனாக அறிவித்தன. மேலும், இது தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகள் சார்பில் சிபிஐ-யில் புகார் தெரிவிக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில் அந்த நிறுவனம் தனது லாபத்தை பொய்யாக அதிகரித்து காட்டி, பல்வறு போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, டிபிஐஎல் நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். பட்னாகர், அவரது மகன்களும், நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்களுமான அமித் பட்னாகர், சுமித் பட்னாகர் ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
வதோதராவில் உள்ள அவர்களது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். டிபிஐஎல் நிறுவனத்துக்கு பாங்க் ஆஃப் இந்தியா 348.99 கோடி ரூபாயும், ஐசிஐசிஐ வங்கி 279.46 கோடி ரூபாயும், பாங்க் ஆஃப் பரோடா 348.99 கோடி ரூபாயும் கடன் அளித்துள்ளன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com