திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்தார் ராஜேந்திரபாலாஜி
மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று மாலை வந்தார். இரவு திருமலையில் தங்கிவிட்டு. இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தம், லட்டு பிரசாதங்கள் வழங்கினர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில் வருகின்ற தேர்தலில் அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும், கொரோனாவின் பிடியிலிருந்து மக்கள் மீண்டு நல்ல ஆரோக்கியத்துடன் சந்தோஷத்தோடு இருக்க வேண்டிக் கொண்டதாக தெரிவித்தார். ரஜினிகாந்தின் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ஆலை விடுங்க என்றபடி பேச மறுத்து நகர்ந்து விட்டார்.