வாழ்க்கை வரலாறு படத்தில் இணையும் மற்றொரு வீரர்.. தனுஷ் பட இயக்குனர் இயக்கம்..

சினிமா உலகில் வெற்றியும் வசூலும்தான் முதல் குறி. அதற்காக கமர்ஷியல் படங்கள்தான் அதிகம் வெளியாகிறது. அதே சமயம் எல்லா கமர்ஷியல் படங்கலும் வெற்றி பெறுவதில்லை. பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் கமர்ஷியல் படங்கள் சில சமயம் மண்ணை கவ்வி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்களின் வாழ்க்கை சரித்திர படங்களுக்கு மவுசு கூடிக்கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்கு முன் மகாத்மா காந்தியின் வாழ்க்கை படத்தை காந்தி என்ற பெயரில் உருவாகி அப்படம் உலக அளவில் வசூல் குவித்தது. அதன்பிறகு நீண்ட வருடங்கள் கழித்து கிரிக்கெட் வீரட் தோனியின் வாழ்க்கை வரலாறு உருவாகி இந்தியா முழுவதும் வரவேற்பு பெற்றது.

அதை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின் வாழ்க்கை படம் உருவானது. அதற்கும் வரவேற்பு கிடைத்தது. தமிழில் நடிகை சாவித்ரை வாழ்க்கை படம் நடிகையர் திலகம் பெயரில் உருவானது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். படமும் வெற்றி பெற்றது. கீர்த்தி சுரேஷுக்கும் தேசிய விருது கிடைத்தது. ஏற்கனவே இந்தியில் டர்ட்டி பிக்சர் பெயரில் சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் உருவானது. வித்யாபாலன் நடித்திருந்தார். இப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. விரைவில் தமிழில் சில்க் ஸ்மிதா வாழ்க்கை படம் உருவாக உள்ளது. டென்னிஸ் வீராங்கனை, பேட்மிண்டன் வீராங்கனை வாழ்க்கை படங்கள் உருவாகி வருகின்றன.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படத்தை மாதவன் இயக்கி நடித்து வருகிறார். சமீபத்தில் ஏர் டெக்கான் அதிபர் கோபிநான் வாழ்க்கையை தழுவி சூரரைப்போற்று படம் உருவாகி ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் சூர்யா நடித்திருந்தார். இப்படத்தை பிரபல நடிகர் நடிக்க இந்தியில் சூர்யாவே தயாரிக்க உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரிலும் அயர்ன் லேடி என்ற பெயரிலும் உருவாகிறது. தலைவி படத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். அயர்ன்லேடி படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார்.

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ், கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது வாழ்க்கை கதைகள் தற்போது படமாகி வருகின்றன. அந்த வரிசையில் செஸ் வீரர் படமும் உருவாகிறது. இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை இந்தி பட இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கிவர். தற்போது தனுஷ், அக்‌ஷய் குமார் நடிக்கும் அட்ராங் ரே என்ற படத்தை இயக்கி வருகிறார். சதுரங் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வேடத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு விரைவில் நடக்கிறது.

More News >>