மாமல்லபுரத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொரானா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்து ரதம் போன்ற பகுதிகள் எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.எனினும் இதற்காக சில வழிகாட்டும் நெறிமுறைகள் தொல்லியல்துறையால் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தினமும் காலை 8 முதல் மாலை 5 மணிவரை 2 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 10 வயதுக்குக் குறைந்தவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது நிறைவு கட்டத்தை ரொக்கமாகச் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலமாகவே கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.