கொரோனாவில் வேலை இழந்தவர்களுக்கு இ ரிக்ஷா வழங்கும் நடிகர்.. சொத்துக்களை விற்று உதவி செய்கிறார்..
கொரோனா ஊரடங்கில் பல லட்சம்பேர் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். திரைப்பட நடிகர்கள் பலர் தங்களது திரையுலக அமைப்பின் குறிப்பிட்ட தொகை நன்கொடை அளித்து மூலம் உதவிகள் செய்தனர். அது தொடர் உதவியாக அமையவில்லை. ஆனால் ஒரு நடிகர் கொரோனா கால கட்டத்தில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு ஒடி ஓடி உதவினார். அவர்தான் வில்லன் நடிகர் சோனு சூத். திரைப்படங்களில் வில்லனாக நடித்தவர் நிஜ வாழ்வில் ஹீரோவாக மாறினார். தேவி, அருந்ததி, ஒஸ்தி போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
ஊரடங்கின்போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்தவர்கள் ஊர் திரும்ப முடியாமலும் உணவுக்கு வழியில்லாமலும் தவித்தபோது அவர்கள் ஊர் திரும்ப பஸ், ரயில் மற்றும் விமானங்களில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படிக்கச் சென்ற பலர் அங்கிருந்து திரும்ப முடியாமல் தவித்த நிலையில் அவர்களை விமானத்தில் இந்தியா அழைத்து வந்தார். மாடுகள் இல்லாத நிலையில் மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்தார். வட நாட்டு கிராம பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் நீண்ட தூரம் சென்று படிக்க முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்திய நிலையில் அவர்கள் அனைவருக்கும் சைக்கிள் வாங்கித் தந்தார் சோனு சூத்.
இப்படி கொரோனா ஊரடங்கில் தொடங்கிய சோனுவின் உதவிகள் இன்னமும் தொடர்கிறது. பிரவாசி ரோஜ்கர் (Pravasi Rojgar) என்ற ஒரு ஆப் தொடங்கி அதில் வேலை கேட்பவர்களை பதிவு செய்ய வைத்து அவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தந்தார். இதன் மூலம் 50 ஆயிரம்பேர் வேலை வாய்ப்பு பெற்றனர். மேலும் பலர் அவரிடம் உதவி கேட்டு இதற்காக தனது சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்திருக்கிறார். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் வேலை இழந்தவர்கள் பலர் அவரிடம் உதவி கோரினர்.
அவர்களுக்கு இ ரிக்ஷா வாங்கித் தர முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் தந்து இணையதள பக்கத்தில் கூறும் போது, ஒரு சிறிய முன்னெடுப்பு நாளை அவர்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இ ரிக்ஷா வழங்குவதன் மூலம் அவர்கள் ஒரு தொழில் தொடங்கலாம். சிறிய உதவி செய்வதன் மூலம் மக்களை அவர்களே சுயமாக சம்பாதித்து சுயமாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு உயர்த்தும் என்றார். சோனு சூட்டின் இந்த மனிதாபிமான உதவிகாக அவரை இணையதளங்கள் சிற்ந்த மனித நேயம் மிக்கவர் என்று உலக அளவில் தேர்வு செய்து அறிவித்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த சோனு சூத். என்னுடைய மக்களுக்கு உதவ வேண்டியது என் கடமை என்றார்.