மீண்டும் கொரோனா தாண்டவம் : சென்னை ஐ.ஐ.டி. மூடல்

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து குறைந்து வந்ததைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கல்வி நிலையங்களை தவிர மற்ற அனைத்தும் வழக்கம் போல் செயல்படும் துவங்கிவிட்டன வரும் ஜனவரி முதல் அனைத்து கல்வி நிலையம் திறக்கலாமா என்பது குறித்து அரசு பல்துறை நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது.

இதனிடையே சென்னை ஐஐடியில் கடந்த 14 நாட்களில் மட்டும் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப் படுத்தப் படுள்ளது. மாணவர் விடுதி மற்றும் உணவகம் மூலம் பரவியதாக தெரியவந்ததையடுத்து விடுதியும் உணவகமும் உடனடியாக மூடப்பட்டது.இது தவிர ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் மூலம் படிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More News >>