குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது அமலாபால் வழக்கு
நடிகை அமலா பால் போலி முகவரி கொடுத்து சொகுசு கார் வாங்கியது தொடர்பான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலாபால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, புதுச்சேரி சென்று மோட்டார் வாகனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது, அந்த முகவரி போலியானது என காவல்துறையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது, இந்நிலையில் இந்த வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
டிஜிபி லோக் நாத் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.