நான் நினைத்தால் பிரதமராக முடியும்: பாபா ராம்தேவ் பேச்சால் சர்ச்சை

“நான் நினைத்தால் பிரதமராக முடியும். ஆனால் எனக்கு அதில் ஆர்வமில்லை” என்று பாபா ராம்தேவ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் நாடு முழுவதும் குறுகிய காலத்தில் பிரபலமாகி இருக்கிறது. ராம்தேவின் பின்னணயில் பாஜக இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பாபா ராம்தேவ் சர்ச்சையான பேட்டியை அளித்துள்ளார். அதில், “நான் நடத்தும் நிறுவனத்தில் இருந்து எப்போதும் எனக்கு வருமானம் தேவைப்பட்டது இல்லை. நான் இதை பொது நல நோக்கத்தோடு மட்டுமே செய்கிறேன். நான் நினைத்தால் இப்போது கூட பிரதமர் ஆக முடியும். பாஜக கட்சியில் எனக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறது. கட்சி அலுவலகம் திறந்து முதலமைச்சராகவோ, எம்பி.,யாகவோ, பிரதமராகவோ முடியும்.

ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு அரசியலில் ஈடுபட விருப்பம் இருந்ததே இல்லை. நான் இப்படியே மக்களுக்கு சேவை செய்யவும், பதஞ்சலி மூலம் பொருட்கள் விற்கவும் விரும்புகிறேன்” என்றார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>