சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுவேன்.. கமல் அறிவிப்பு..
சட்டமன்றத் தேர்தலில் நான் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் என்று கமல் அறிவித்துள்ளார்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக மதுரையில் இருந்து அவர் நேற்று பிரச்சாரத்தைத் தொடங்கினார். வரும் 16ம் தேதி வரை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
மதுரையில் 2வது நாளாகப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நான் கண்டிப்பாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதைப் பின்னர் அறிவிப்போம். நான் நேர்மையை வைத்துத்தான் அரசியல் செய்கிறேன். ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும் போது முடிவு செய்வேன். வரும் 31ம் தேதி ரஜினி தனது கட்சியை அறிவிக்கட்டும். அது வரை பொறுத்திருங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களே இருக்கக் கூடாது என்று சொல்வது மடமை.இவ்வாறு கமல் தெரிவித்தார்.