இளைய மருமகளுடன் தகாத உறவு மூத்த மருமகளுடன் சேர்ந்து கணவனை கழுத்தை அறுத்து கொன்ற மனைவி
இளைய மருமகளுடன் தகாத உறவு வைத்திருந்த கணவனை மூத்த மருமகளுடன் சேர்ந்து மனைவி கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.உத்திரப் பிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ளது கொய்ரானா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான ஒருவருக்கு மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். இவர்கள் 4 பேரும் மும்பையில் கூலித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் 2 பேருக்குத் திருமணம் முடிந்து விட்டது. இருவரது மனைவிகளும் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாமனாருக்கும், இளைய மருமகளுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர்கள் உல்லாசமாக இருப்பதை அவரது மனைவி பார்த்து விட்டார். இதில் அதிர்ச்சியடைந்த அவர், கணவனுடன் தகராறில் ஈடுபட்டார். ஆனால் மருமகள் உடனான உறவைத் துண்டிக்க அவர் மறுத்துவிட்டார். இது மனைவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தனது கணவனின் தகாத உறவு குறித்து மூத்த மருமகளிடம் அவர் கூறினார். இதையடுத்து இருவரும் சேர்ந்து இளைய மருமகளை அவரது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதில் கோபமடைந்த அவர், மூத்த மருமகளைத் தாக்கினார். பின்னர் மனைவி மற்றும் மூத்த மருமகள் இருவரையும் அவர் வீட்டைவிட்டு வெளியேற்றினார். இதையடுத்து இருவரும் அதே தெருவில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தனர். இந்நிலையில் இளைய மருமகளை அந்த நபர் தன்னுடைய வீட்டுக்கு மீண்டும் அழைத்து வந்தார்.
இது குறித்து அறிந்த அவரது மனைவியும், மூத்த மருமகளும் சம்பவத்தன்று இரவு வீட்டுக்குள் புகுந்து அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கினர். பின்னர் கத்தியால் இருவரும் சேர்ந்து அவரது கழுத்தை அறுத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.இது குறித்து இளைய மருமகள் கொய்ரானா போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்தார். போலீசார் விரைந்து செல்வதற்குள் அந்த நபர் மரணமடைந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாமியார், மருமகள் இருவரையும் கைது செய்தனர்.