திசைமாறும் விஜே சித்ராவின் தற்கொலை வழக்கு.. தாய் கொடுத்த மன அழுத்தத்தால் தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி..
மக்கள் தொலைக்காட்சியில் ஒரு சிறிய தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கி தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் வரை அசுர வளர்ச்சி அடைந்தவர் தான் சித்ரா. சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் கலையரசியாக நடித்து தமிழ் மக்களின் மனதில் கொள்ளை அடித்தவர். அதன் பிறகு கிடைத்த வாய்ப்பை அனைத்தையும் சரியாக கையாண்டு யாரும் தொடமுடியாத உயரத்தில் வளர்ந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக அறிமுகமாகினார்.
இந்த சீரியல் இவரது வாழ்க்கையில் ஒரு புதிய திருப்புமுனையாக அமைந்தது. இவருக்கு தமிழ்நாட்டில் பரவலாக எங்கு பார்த்தாலும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவருக்கு அடுத்த மாதம் தொழில் அதிபருடன் திருமணம் நடக்க இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி அதிகாலையளவில் சித்ரா நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி ஊடகம் முழுவதும் பரவி வந்தது. இதுகுறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. போலீஸ் சித்ராவின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் சித்ரா ஹேம்நாத்தை திருமணம் செய்வதில் அவரது தாய்க்கு துளி கூட சம்மதம் இல்லையாம். இதனால் சித்ராவிடம் அவரது தாய் தினமும் ஹேம்நாத்தை திருமணம் செய்ய கூடாது என்று வற்புறுத்துள்ளார். இதனால் தான் பயந்து இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். சம்பவத்தன்று சித்ரா ஷூட்டிங் முடித்து விட்டு ஹோட்டலுக்கு திரும்பியவுடன் ஹேம்நாத்தை வெளியே காக்க வைத்து விட்டு குளிக்க சென்றுள்ளார். பிறகு சித்ராவின் தாய் போனில் தொடர்பு கொண்டு ஹேம்நாத்தை பற்றி தரக்குறைவாக பேசியதால் இருவருக்கும் வாக்குவாதம் முத்தியது.
இதனால் கோவத்தின் உச்சியில் இருந்த சித்ரா அவரது மன வருத்தத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. இதற்கு ரசிகர்கள் தரப்பில் மிகுந்த எதிர்ப்புகள் வந்துள்ளது. சித்ரா அவ்வளவு கோழை ஒன்றும் இல்லை. இந்த சிறிய விஷயத்திற்க்காக சித்ரா தற்கொலை செய்து இருக்க மாட்டார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் அவருக்கு அதிகமாகவே உள்ளது என்று சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் தொடர்ந்து 5வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.