பத்தே நிமிடத்தில் சிம்பிளான தேங்காய் சட்னி செய்வது எப்படி??
காலை டிபனான பொங்கல், இட்லி, தோசை போன்ற உணவுகளை தேங்காய் சட்டினியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை.. அனைவரின் வீட்டில் கட்டாயமாக சட்னி இடம்பெறும். அதுவும் தேங்காய் சட்னி என்றால் ஹோட்டல் சட்னி தான் நினைவுக்கு எட்டும். வாரத்துக்கு ஒரு முறையாவது இந்த சட்னியை நம் சாப்பிடும் உணவில் சேர்த்து கொள்ளுவோம். இல்லத்தரசிகள் எத்தனை முறை தேங்காய் சட்னி செய்தாலும் ஹோட்டல் ஸ்டைலில் வரவில்லை என்று வருத்தபடுவது உண்டு. குடும்ப தலைவிகளே கவலை வேண்டாம். எப்படி ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:- தேங்காய்-1 கப் பச்சை மிளகாய்-1 இஞ்சி -சிறிதளவு சீரகம்-1 ஸ்பூன் உப்பு -தேவையான அளவு எண்ணெய்-தேவையான அளவு கறிவேப்பிலை-சிறிதுஉளுத்தம் பருப்பு-1 ஸ்பூன் கடுகு-1 ஸ்பூன்
செய்முறை:- முதலில் தேங்காய் துருவி வைத்து கொள்ளவும். பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய தேங்காய் மற்றும் தேவையான உப்பு இவற்றுடன் சிறுது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவை சேர்த்து தாளித்து கொள்ளவும். தாளித்ததை சட்னி கலவையில் ஊற்றினால் சுவையான தேங்காய் சட்னி ரெடி. வீட்டில் கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க!!