2 ஆண்டுக்கு பிறகு களமிறங்கும் சிங்கங்கள் - வெற்றியுடன் தொடங்குமா சி.எஸ்.கே.?
இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் மீண்டும் களம் காணுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கினாலும், ரசிகர்களிடம் முன்பு இருந்ததை விட அதிக வரவேற்பு தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 5 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
ஆனால், ஆதர்சன சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாமல் நீண்ட நாட்களுக்கு களமிறங்குகிறது சென்னை அணி. அதே சமயம் நடப்புச் சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் அதே உத்வேகத்தோடு களம் காண உள்ளது.
இதுவரை விளையாடியுள்ள 132 போட்டிகளில் 79 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. 52 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.
2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை இரண்டு முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் மேத்யூ ஹைடன் மற்றும் 2013ஆம் ஆண்டு மைக் ஹஸி ஆகியோர் பெற்றுள்ளனர்.
அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை கைப்பற்றியுள்ளது. 2013ஆம் ஆண்டு டுவைன் பிராவோ, 2014 ஆம் ஆண்டு மொஹித் சர்மா, 2015ஆம் ஆண்டு டுவைன் பிராவோ ஆகியோர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலில், 321 பவுண்டரியுடன் சுரேஷ் ரெய்னா முதலிடத்திலும், அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில், 150 சிக்ஸர்களுடன் சுரேஷ் ரெய்னா முதலிடத்திலும் உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பெற்ற இடங்கள்:
2008 ஆம் ஆண்டு – 3ஆம் இடம்2009 ஆம் ஆண்டு – இரண்டாவது இடம்2010 ஆம் ஆண்டு – சாம்பியன்2011 ஆம் ஆண்டு – சாம்பியன்2012 ஆம் ஆண்டு – நான்காவது இடம்2013 ஆம் ஆண்டு – முதல் இடம்2014 ஆம் ஆண்டு – மூன்றாவது இடம்2015 ஆம் ஆண்டு – முதல் இடம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக ரன்கள் குவித்தவர்கள்:
1. சுரேஷ் ரெய்னா, 3699 ரன்கள்2. எம்.எஸ்.தோனி, 2987 ரன்கள்3. மைக் ஹஸி, 1768 ரன்கள்4. முரளி விஜய், 1600 ரன்கள்5. எஸ்.பத்ரிநாத், 1441 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின், 90 விக்கெட்டுகள்2. டுவைன் பிரவோ, 79 விக்கெட்டுகள்3. ஆல்பி மோர்கல், 76 விக்கெட்டுகள்4. மொஹித் சர்மா, 57 விக்கெட்டுகள்5. ரவீந்திர ஜடேஜா, 55 விக்கெட்டுகள்
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com