டிவிட்டரில் அதிகம் பேசப்பட்டதில் முதலிடம் பிடித்த ஹீரோ படம்..
கூகுள், யாஹூ போன்ற இணையத்தளத்தில் உலக அளவில் பிரபலங்கள் தேடப்பட்டவர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்த பட்டியலில் தற்கொலை செய்து கொண்டு இறந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி, சோனு சூட் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தனர். அதே போல் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்ட படங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிகம் பேசப்பட்ட படமாகத் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் முதலிடம் பிடித்துள்ளது.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடித்த வக்கீல் சாப படம் 2வது இடம் பிடித்துள்ளது. 3வது இடத்தில் அஜித் குமார் நடிக்கும் வலிமை படம் பெற்றிருக்கிறது.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று 5-வது இடத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் 10-வது இடத்தையும் பெற்றுள்ளது.
டிவிட்டரில் அதிகம் பேசப்பட்ட நடிகர், நடிகைகளைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. நடிகர் மகேஷ் பாபு, முதல் மற்றும் பவன் கல்யாண், விஜய் ஆகியோர் 2வது 3வது இடங்கள் பிடித்திருக்கின்றனர். நடிகர் சூர்யா 5-வது இடத்திலும், தனுஷ் 8-வது இடத்திலும் உள்ளனர்நடிகைகளில் கீர்த்தி சுரேஷ், காஜல் அகர்வால், சமந்தா முதல் மூன்று இடங்களில பெற்றிருக்கின்றனர். 4வது இடத்தில ராஷ்மிகா , 7வது இடத்தில் தமன்னா. ரகுல் பிரீத் சிங் 8வது இடம், ஸ்ருதி ஹாசன் 9வதுஇடம் , திரிஷா 10வது இடத்தில் உள்ளனர்.