டுவிட்டர் டிரெண்டிங்கில் #GoogleDown #YouTubeDOWN ஹேஸ்டேக்... ஏன், எதற்கு?!
டெல்லி: கூகுள் நிறுவனத்தின் யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் முடங்கியது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று மதியத்தில் இருந்து கூகுளின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாலையில் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பயனர்கள், தங்களால் மின்னஞ்சலை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்துள்ளனர். அதேபோல யூடியூப் தளத்தையும் பயன்படுத்த முடியவில்லை என்று ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கூகுள் நிறுவனத்தின் கூகுள் ட்ரைவ், யூ டியூப், கூகுள் மீட், ஜிமெயில் ஆகியவை முடங்கியுள்ளன. இதனையடுத்து டுவிட்டரில் #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இது தொடர்பாக விளக்கம் அளித்த யூடியூப் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில், யூடியூப் அதன் முகப்புப்பக்கத்தில் ஏதோ தவறு ஏற்பட்டது. பிழையைக் காட்டுகிறது, ஜிமெயிலிலும் கணினி சிக்கல் ஏற்பட்டுள்ளது. (# 2014). கூகிள் டிரைவ் மற்றும் டாக்ஸ், ஷீட்ஸ் போன்ற சேவைகள் செயல்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளது