படப்பிடிப்பு இடத்தில் மயங்கி விழுந்த பிக் பாஸ் பிரபலம்..!
தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமாக நிகழும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதனை பத்மஸ்ரீ கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் 3 வது சீசனில் அடியெடுத்து வைத்தவர் தான் மதுமிதா. இவர் மோகினி, யாமிருக்க பயமேன் போன்ற பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் ஜாங்கிரி மதுமிதா என்ற பெயர் வைத்து கூப்பிடுவது வழக்கம்.
இவர் பிக் பாஸ் சென்ற ஒரு மாதத்திலே சக போட்டியாளர்கள் கொடுத்த தொல்லையால் மனம் உடைந்து தற்கொலை முயற்சி செய்தார். இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பல பட வாய்ப்புகள் பெற்று மீண்டும் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் விஜய் சேதுபதி அனபெல் சுப்ரமண்யம் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் மதுமிதாவும் ஒரு கதாத்திரமாக நடிக்கிறார்.
இவர் வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் சாமிக்கு விரதம் இருப்பாராம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டபுள் கால்ஷீட் இருந்ததால் உடம்பில் தெம்பு இல்லாமல் நடிக்கும் பொழுது மயங்கி விழுந்துள்ளார். அப்பொழுது படக்குழுவினர் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் உணவு உண்ணாத காரணத்தினால் வந்த மயக்கம் தான் என்று கூறியுள்ளனர். மதுமிதா சிறுது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் நடிக்க தொடங்கினார்.