இந்தியர்கள் என்பதை நிரூபியுங்கள் - முஸ்லிம்களுக்கு சங் பரிவார் மிரட்டல்
திரிபுராவிலுள்ள முஸ்லிம்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மிரட்டல் விடுத்துள்ளன.
திரிபுரா மாநிலத்தில் மாணிக் சர்க்காரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த நாள் முதலே, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும், பாஜகவினரும் மக்களிடையே வன்முறையை தூண்டிவிட்டு வருகின்றனர். தீவிரவாத அச்சுறுத்தலற்ற மாநிலமாக இருந்த திரிபுராவில் மதம் மற்றும் இனத்தின் பெயரில் வன்முறை தூண்டு விடுகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சுமார் 600 பேர், மேற்கு திரிபுராவில் ஊர்வலம் சென்றனர். அப்போது, ஊர்வலம் சென்ற வழிகளில் எல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் கூச்சல்களை எழுப்பிக் கொண்டே சென்றனர்.
மேலும் அவர்கள், கிராமங்களிலுள்ள முஸ்லிம்களிடம் அவர்கள் இந்தியர்கள்தான் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். கிராமங்களில் வசிக்கும் முஸ்லிம்களின் ஆதார் அடையாள அட்டைகளையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் மிரட்டி வாங்கிப் சோதனையும் செய்துள்ளனர்.
தொடர்ந்து, பத்திரிகையாளர்களிடம் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத்தின் திரிபுரா மாநிலச் செயலாளர் அமல் சக்ரவர்த்தி, “திரிபுராவில் இதுவரை ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாட்டிறைச்சி உண்பதையும் அதற்காகப் பசுக்கள் கொல்லப்படுவதையும் ஊக்கப்படுத்தியது; ஆனால், இனி மாடுகள் கொல்லப்பட்டால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என மிரட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com