கணவர் தலையில் அடித்து சத்தியம் செய்த நடிகை.. எப்போதும் உங்களை சிரிக்க வைப்பேன்..
சில நடிகைகளுக்கு மட்டுமல்ல சில சமயம் நடிகர்களுக்கும் திருமணம் என்பது கெட்ட கனவாகிவிடுகிறது. மனம் ஒருமித்து திருமண செய்யும் ஜோடிகள் என்ன காரணத்தாலோ சில ஆண்டுகளில் மனக்கசப்பு ஏற்பட்டுப் பிரிகின்றனர். சட்டப்படி விவாகரத்தும் செய்கின்றனர். நடிகர்கள் பார்த்திபன், பிரபு தேவா, பிரகாஷ்ராஜ், கிருஷ்ணா, விஷ்ணு விஷால், மலையாள நடிகர் திலீப், தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இப்படி பட்டியல் நீள்கிறது. இவர்களில் சிலர் மறுமணம் செய்து கொண்டிருக்கின்றனர். சிலர் செய்யவில்லை.
சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்தவர் நடிகை நிஹாரி. இவருக்குத் தொழில் அதிபர் சைதன்யாவுடன் கடந்த 9ம் தேதி உதய்பூரில் திருமணம் நடந்தது. கொரோனா தளர்வில் நடந்த ஆடம்பர திருமணமாக இது அமைந்தது. சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் எனப் பல நட்சத்திரங்கள் பங்கேற்றதுடன் திருமண கொண்டாட்டங்கள் பல நாட்கள் களைகட்டியது. உதய்பூரில் ஒரு திருமண வரவேற்பு நடந்த நிலையில் அனைவரும் ஐதராபாத் திரும்பிய பிறகு அங்கும் நிஹாரிகா, சைதன்ய திருமண வரவேற்பு இரண்டாவது முறையாக நடந்தது. மனமொருமித்த தம்பதிகளாக இவர்கள் திருமண கொண்டாட்டத்தை நிறுத்தாமல் கொண்டாடி வருகின்றனர்.
நிஹாரிகா தனது இணையதள பக்கத்தில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் தனிப் படங்களைச் சமீபத்தில் வெளியிட்டார். தற்போது கணவர் தலையில் அடித்து சத்தியம் செய்யும் படத்தை வெளியிட்டு உறுதி மொழி தந்திருக்கிறார். அதில்,சைதன்யா, உங்களைச் சிரிக்க வைப்பதற்காகக் கிடைக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் நான் மிஸ் செய்ய மாட்டேன் இது சத்தியம். (நான் உங்களை அடிக்கும்போதும் உங்களுக்குச் சிரிப்புதான் வரும்) இதிலிருந்து பின்வாங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.கல்யாண சடங்கின்போது மணமகளும் மணமகனும் இருவரும் ஒருவர் தலையில் ஒருவர் சத்தியம் செய்வது போல் கைவைத்து எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி படத்தைத்தான் நிஹாரிகா வெளியிட்டிருக்கிறார்.
அந்த படத்தில் சைதன்யா தலையில் கையை மெதுவாக வைப்பதற்கு பதில் தலையில் அடிப்பதுபோல் படாரென்று வைத்து கணவரை கலகலப்பில் ஆழ்த்திய படத்தை வெளியிட்டிருக்கிறார் நிஹாரிகா. அதைப்பார்த்த நெட்டிஸன்கள் உங்களின் சந்தோஷம் நீடிக்கட்டும் என்று வாழ்த்து பகிர்ந்துள்ளனர். இன்னும் சிலர், இப்படி அடித்தால் கணவர் எழுந்து ஓடிவிடுவார் என்று கலகலப்பாக மெசேஜ் பகிர்ந்துள்ளனர்.