இனி செம்பருத்தி சீரியலில் இவர் கிடையாது.. அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல்..
தனியார் தொலைக்காட்சியில் முதல் முறையாக சினிமா பாணியில் சீரியல் எடுக்கப்பட்டது என்றால் அது செம்பருத்தி சீரியல் தான். இது மற்ற சீரியலை பின்னுக்கு தள்ளி சுமார் மூன்று வருடங்களாக நம்பர் 1 பதவியில் நிலைத்து நிற்கிறது. இதில் ஹீரோயினாக புதுமுகம் ஷபானா அறிமுகமாகி பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகை மற்றும் அவரை சொந்த அண்ணனாக கருதி உயிர் மூச்சாய் நேசித்துவருகிறார். சில வருடத்திற்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'ஆபீஸ்' சீரியலில் நடித்து மிகுந்த புகழ் பெற்றவர் தான் கார்த்திக். ஆபீஸ் சீரியல் பிறகு இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரையில் இவரது மார்க்கெட் குறைந்தது.
இவர் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரே வருடத்தில் செம்பருத்தி சீரியல் இவரை வெற்றியின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. தொட்டது எல்லாம் பொன்னாக மாறிய கதையாக இந்த சீரியலில் இவர் நடிக்க தொடங்கியதிலிருந்து பல திரைப்பட வாய்ப்புகள் அவரை சூழ ஆரம்பித்தது. இதனின் விளைவாய் தான் 'முகிலன்' என்ற திரைப்படத்தில் நடித்து அப்படமும் ஓடிடி தளத்தில் வெற்றியை சந்தித்து வருகிறது. ஆதி பார்வதி இரண்டு கதாபாத்திரத்துக்கும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அது மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் பல ரசிகர் கூட்டங்கள் இவர்களுக்கு இருக்கின்றது. இவர்களது காதல் கெமிஸ்ட்ரி கண்ணுப்படும் அளவிற்கு அழகாக இருக்கும்.
சீரியல் குழு சில நாளுக்கு முன் முக்கிய கதாபாத்திரத்தில் இருந்த ஐஸ்வர்யா என்கிற ஜனனியை வெளியேற்றி வேற ஒரு புது முகத்தை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இருந்தனர். இது மக்களுக்கு பெரும் ஏமாற்றமாய் அமைந்தது. இந்த வடுவே ஆறாத நிலையில் ரசிகர்களுக்கு பெரு அதிர்ச்சி தரும் விதமாக சீரியலின் கதாநாயகனான ஆதி என்பவர் சீரியலை விட்டு விலக உள்ளதாகவும், இனி வரும் எபிசோடில் குக்கு வித் கோமாளியில் குக்காக இருக்கும் அஸ்வின் குமார் ஆதியாக நடிப்பார் என்று செய்திகள் இணையத்தளத்தில் வெளியானது. தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக ஆதி செம்பருத்தி சீரியலை விட்டு விலகுவதாக கூறியுள்ளனர்.