ராஜபாளையம் அருகே கோர விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
ராஜபாளையம் அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஜபாளையம், தேவதானம் அரசு விதைப் பண்ணை அருகே கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று மோதியது. இதில், நிலைக்குலைந்த கார் நொறுங்கியது. இதனால், காருக்குள் இருந்த 7 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து காருக்குள் சிக்கி இருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், விபத்தில் பலியானவர்கள் பெங்களூரை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சென்றிருந்தனர். அப்போது கார் விபத்தில் சிக்கி 7 பேரும் பலியானது தெரியவந்தது. மேலும், காயம் அடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com