முதல் ஓபன் நாமினேஷன்.. அனிதாவின் திமிர் பேச்சு.. ஷிவானியின் எதிர்பாராத அழுகை.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??
தர்பார் படப்பாடல் போட்டாலும், இவங்க எழுந்து வந்து ஒரு பொசிஷன்ல நின்னு ஆடறதுக்குள்ள அந்த பாட்டு முடிஞ்சு போச்சு.ரியோ மாத்தி பேசினதை பத்தி ரம்யாவும், அனிதாவும் டிஸ்கஸ் பண்றாங்க. அது புடிக்கல, இது போரிங்னு திரும்ப திரும்ப சொன்னதை இவங்க ரெண்டு பேரும் சொல்லி காட்டினது நல்லாத்தான் இருந்தது. ரியோவுக்கு தெரியாத வரைக்கும் நல்லது.
இந்த சீசனோட முதல் ஓபன் நாமினேஷன். முதல் ஆளா ஆரியை கூப்பிட்டு ஆரம்பிச்சாரு பிக்பாஸ். ஆஜித், ஷிவானி ரெந்டு பேரும் பொதுவான ஆளுங்கறதால எல்லாரும் பிரிச்சு எடுத்துகிட்டாங்க. மத்தபடி அர்ச்சனா குரூப் டார்கெட் ஆரியும், அனிதாவும். மத்தவங்க டார்கெட் அர்ச்சனா குரூப். ஆக மொத்தம் மாத்தி மாத்தி குத்திகிட்டாங்க.
அனிதா, ஆரி, ஆஜித், அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், ரியோ, சோம் இருக்கற 10 பேர்ல 7 பேர் நாமினேஷன்ல இருக்காங்க. பாலா தொடர்ந்து ரெண்டாவது வாரமா நாமினேஷன் ஆகலை. கேப்பியும் தப்பிச்சுட்டாங்க. இந்த வாரம் டஃப் காம்பிட்டிஷன்ல ஆஜித்தும், ஷிவானியும் தான் மாட்டிப்பாங்கனு நினைக்கிறேன்.
ரியோ நாமினேட் செய்யும் போது அனிதாவை பத்தி ஒரு விஷயம் பேசறாரு. கமல் சார் ஷோல பேசும் போது 12 பேருக்கு நான் ஒருத்தியா சமைச்சு போட்டேன்னு சொன்னதை பத்தி ஒரு கருத்து சொன்னாரு. வீட்ல இத்தனை பேர் இருக்கோம், ஹெல்புக்கு ஆள் வேணும்னு சொல்லிருந்தா வந்துருப்பாங்க. அப்படி யாரையுமே கூப்பிடாம இவங்களா செஞ்சுருக்க வேண்டியதில்லை. ஆனாலும் இந்த கருத்தை பதிவு செய்யறதுக்கு தான் சொல்றேன். அனிதாவை நான் நாமினேட் செய்யப் போறதில்லைனு சொல்லிட்டாரு.
அனிதாவை பத்தி இவ்வளவு பேசினதுக்கு அப்புறம் அனிதா பேசாம இருக்குமா? நாமினேஷன் முடிஞ்ச உடனே ரியோகிட்ட விளக்கம் கேக்கறாங்க. அப்ப ரியோ நடந்துகிட்டே பேசறாரு. அனிதாவும் தொடர்ந்து பேச முயற்சி செய்ய, அவர் பேசிகிட்டே வெளியே போகறாரு. "பதில் சொல்லிட்டு போங்க, ஏன் தைரியம் இல்லாம போறிங்கனு அனிதா கேக்கவும், ரியோ ரொம்பவும் டென்ஷன் ஆகிட்டாரு.
அப்ப ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துக்கு ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசிட்டே இருந்தாங்க. நடந்து முடிஞ்ச ஒரு விஷயத்துக்கு, நீ அப்படி பண்ணிருக்கலாமே, நீ இப்படி பண்ணிருக்கலாமேனு அட்வைஸ் கொடுக்கறது வேஸ்ட். அதுவும் இதை நாமினேஷன்ல சொல்ல வேண்டியதில்லை. அதே மாதிரி அனிதா யூஸ் பண்ணின வார்த்தையும் தவறானது. யாரை பார்த்தும் அப்படி பேசக்கூடாது.
ரெண்டு பேரும் சண்டை போடும் போது பாலா பக்கத்துலேயே ரெடியா இருந்தாரு. ஓவரா போச்சுன்னா பிரிச்சு விடலாம்னு ஐடியா பண்ணிருப்பாரு போல. இப்போதைக்கு இந்த வீட்டோட அமைதிப் புறாவா மாறிட்டாரு பாலா.
இந்த பஞ்சாயத்து முடிஞ்சதும் சோம் கிட்ட தூது அனுப்பறாங்க அனிதா. அப்ப ஆரியும், பாலாவும் அங்க உக்காந்திருக்காங்க. ஆரி ஏதோ பேச முயற்சி செய்ய "ஒரு நிமிஷம் ஆரி, என் பாயிண்ட்டை பேசி முடிச்சுக்கறேன்னு" ஆரி கிட்ட சொல்லவும், அப்ப ஆரி கொடுத்த ரியாக்சன் செம்ம...
அனிதா கூட பேசிட்டு உள்ள போன சோம், ரியோ கிட்ட இதை பத்தி சொல்றாரு. அனிதா பேசக் கூப்பிடறாங்கனு சொன்னதும், "நீ என்ன மாமாவானு அர்ச்சனா கேட்டது நமக்கே ஷாக்கிங்கா இருந்தது. அதை ரெண்டு தடவை வேற கேட்டாங்க.
ஜி டிவில அர்ச்சனா ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி தொகுப்பாளர். 2.0 படம் வந்த போது சூப்பர் ஸ்டார் கிட்ட பேட்டி எடுக்கற வாய்ப்பு அர்ச்சனாவுக்குத் தான் கிடைச்சது. அப்பவே அவங்களை பாராட்டி எழுதிருந்தேன். ஜி டிவில நிறைய நட்சத்திரங்கள் கூட வேலை பார்த்துருக்காங்க. அப்பல்லாம் நிகழ்ச்சியோட சுவாரஸ்யத்துக்காக அந்த நட்சத்திரங்களையே கலாய்ச்சு பழக்கம் இருக்கு அவங்களுக்கு. சரிகமப நிகழ்ச்சிக்கு வரும் ஜட்ஜஸை ஜாலியா கலாய்க்கறதை எத்தனையோ முறை நாம பார்த்துருக்கோம். பெரிய பெரிய ஸ்டார்ஸையே கலாய்க்கற சுதந்திரம் இருந்ததால, இங்கேயும் அந்த சுதந்திரத்தை அவங்களாவே எடுத்துகிட்டாங்களோனு தோணுது.
குறிப்பா சொல்லனும்னா இந்த வார கமல் சார் ஷோல அவங்க உடல்மொழி கொஞ்சம் கண்ணை உறுத்தினது உண்மை. சர்காசம்னு நினைச்சு அவங்க வணக்கம் சொன்னது பார்க்க சாதாரண நிகழ்வா தெரியும். அது அர்ச்சனாவை தவிர வேற யாரும் அந்த சுதந்திரத்தை எடுத்துக்க மாட்டாங்கனு தோணுது. இன்னொரு விஷயம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஸ்பாண்டேனியஸா கமெண்ட் அடிக்கறது வழக்கமான ஒன்று. நிஷா ஜாலியா பேசும் போது கவுண்ட்டர் கொடுத்துட்டே இருந்தது நினைவிருக்கலாம். பல வருட பழக்கம்ங்கறதால அதை அவங்களால மாத்திக்க முடியாது. அர்ச்சனாவும் அப்படியான பழக்கத்துல தான் சொல்றாங்கனு தோணுது. ஆனா வார்த்தைகளை தேர்ந்தெடுத்த பேச வேண்டியது அவசியம். எதிர்ல இருந்தது சோம்ங்கறதால இதை பெருசா எடுத்துக்கலை.
12 பேருக்கு நான் சமைச்சு போட்டதா சொன்னது, என்ன ஏன் பெஸ்ட் பர்பாமருக்கு எடுக்கலனு கேக்கறதுக்கு இல்ல. ஏன் ஜெயிலுக்கு அனுப்பினீங்கனு கேக்கறதுக்கு. அதை கமல் சாரும் புரிஞ்சுகிட்டாரு. அதனால நீங்களும் புரிஞ்சுக்கோங்கனு ரியோகிட்ட பேசி சமாதானம் ஆகறாங்க அனிதா. ஆனா பேசறதுக்கு முன்னாடி "சிரிங்க, மூஞ்சியை விறைப்பா வைக்காதீங்க, கோவப்படாதீங்கனு" சொன்னதெல்லாம் கேட்டா, சாதுவா இருந்தாலும் காண்டாகிடுவாங்க. ரியோவை பொம்மை மாதிரி ட்ரீட் பண்றாங்க அனிதா. இது நல்லதுக்கில்லை.
தைரியமில்லைங்கற வார்த்தையை பயன்படுத்தினதுக்கு அனிதாவும் சாரி சொன்னதால இந்த பிரச்சினை சுமூகமா முடிஞ்சுது.
பிக்பாஸ் வீட்டில் பலி வாங்கும் செவுரு யாருனு ஜாலியா பேசிட்டு இருந்தாங்க. அனிதா தான் அந்த செவுருனு ரியோ சொன்னதை கேட்டுதன்னோட ட்ரேட்மார்க் சிரிப்பை சிரிச்சாங்க அனிதா.
அர்ச்சனா குரூப் தங்களை யார் யார் நாமினேட் செஞ்சாங்கனு கணக்கு போட்டுட்டு இருந்தாங்க. அவங்க குரூப்பை தவிர மத்த எல்லாரும் இவங்க பேரை சொல்லிருக்காங்க.இதை ஒரு பெரிய கண்டுபிடிப்பு மாதிரி பேசிட்டு இருந்தாங்க. அதுவும் கேப்பி தான் இந்த பிரில்லியண்ட் கேள்வியை கேட்டதாம். அதாவது அர்ச்சனா குரூப்பை நாமினேட் செஞ்சவங்க தான் குரூப்பிசம் செய்யறாங்களாம்.
நாமினேஷன் பத்தி ஆரி பிரதர் பேசினதை யாராவது சப் டைட்டிலோட டப்பின் செஞ்சு கொடுங்க.
சப்பாத்திக்கு நாவூருட்டிட்டு இருந்த ஷிவானியை கன்பெஷன் ரூம் கூப்ட்டாரு பிக்பாஸ். எப்படியிருக்கீங்கனு கேட்ட உடனே ஷிவானி அழ ஆரம்பிச்சுடுச்சு. வாரா வாரம் நாமினேஷன்ல இருக்கற பிரஷரை தாங்க முடியல. அதில்லாம மூத்த ஹவுஸ்மேட்ஸ் முன்னாடி அழுகவும்பிடிக்கல. அதையும் மீறி போன வாரம் அர்ச்சனா கிட்ட அழுததை கமல் சார் ஷோல சொல்லி உடைச்சுட்டாங்க அர்ச்சனா. அதனால யாரை நம்பறதுன்னே தெரியலைனு அழுதுட்டாங்க ஷிவானி.
சாதாரண மனிதர்களா நமக்கு எல்லாவிதமான உணர்ச்சிகளும் மாறி மாறி வந்துட்டு தான் இருக்கு. உணர்ச்சிவசப்படறதும் ஒரு விதமான வடிகால் தான். ரொம்ப சோகமா இருக்கும் போது நல்ல காமெடி ஒன்னை பார்த்து மூடை மாத்திக்கறோம். நல்லா சந்தோஷமா இருக்கும் போதும் நமக்கு பிடிச்ச படத்துல வர சோக சீனுக்காக கண்ணிர் விடறோம். சில சமயங்களில் நண்பர்களோட சேர்ந்து சத்தமா சிரிச்சே கண்ணிர் விடுவோம். இது மாதிரி எல்லா மனிதர்களுக்குமே கலவையான உணர்ச்சிகள் மாறி மாறி வந்துட்டே தான் இருக்கு. ஆனா பிக்பாஸ் வீட்ல அப்படி இல்லை. என்ன தான் அவங்க சிரிச்சு பேசறது நமக்கு தெரிஞ்சாலும் அது வெறும் சில நிமிடங்கள் தான். அதுக்கப்புறம் கேம், ஸ்ட்ராட்டஜி, டாஸ்க், இப்படி நிறைய சிந்திக்க வேண்டி இருக்கு. எந்த தகவல் தொடர்பும் இல்லாத ஒரு இடத்துல மனசு ஒரே இடத்துல சுத்தி வர ஆரம்பிச்சுடும். அதுவே டிப்ரஷனா மாறிடும். மத்தவங்க முன்னாடி அழுதா வீக் கண்டஸ்டண்ட்னு பேர் வாங்க வேண்டி இருக்கும். அதனால கூட சில சமயம் நாம கண்ட்ரோலா இருப்போம்.
அப்படியான சமயத்துல தனியறைல ஆறுதலா ஒருத்தர் பேசும் போது கண்ணிர் வரது இயல்பு தானே. அழுகையும், கண்ணிரும் கூட ஒரு உணர்ச்சி தானே. அதுக்கான வாய்ப்பும் இடமும் கொடுத்ததா தான் நினைக்கத் தோணுது. வாய் விட்டு அழுதுட்டா கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க இல்ல. நேத்து அழுகைக்கு அப்புறம் ஷிவானி தெளிவா இருக்க வாய்ப்பு இருக்கும்னு தோணுது.
அடுத்து ரியோவை கூப்பிட்டதும் செம்ம. ஆரியை கூப்பிட்டு ரியோவை அனுப்பி வைக்கச் சொன்னது தூள்.
இன்னிக்கு என்ன நடக்குதுனு பார்ப்போம்.