செட்டிநாடு நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.23 கோடி பறிமுதல்: வருமான வரித்துறை தகவல்
சென்னை: செட்டிநாடு குழும நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு குழுமம், சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, பத்திரம் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான சென்னை, திருச்சி, கோவை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், செட்டிநாடு குழும நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், செட்டிநாடு நிறுவனம் ரூ.700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்குச் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.