நல்ல பார்மில் இருக்கிறார்: ஆஸ். எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறக்க சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தல்
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி குறித்துப் பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடினார். நல்ல பார்மில் இருக்கிறார். எனவே, மயங்க் அகர்வால் உடன் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றார்.
சுப்மன் கில் ஆட்டத்தை நேரில் பார்த்த ஆலன் பார்டன், அவர் ஆட்டம் மிகவும் கவர்ந்து விட்டதாகக் கூறினார். நானும் அதைதான் சொல்கிறேன். முதல் டெஸ்ட்டில் சுப்மன் கில் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்றார்.