வகுப்பறையில் சரக்கு அடித்துவிட்டு மல்லாக்க கிடந்த பள்ளி ஆசிரியர்!
திருப்புவனம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மதுபோதையில் வந்த விளையாட்டு ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மேலப்பூவந்தி பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 13 ஆசிரியர்களுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் சிவகுருநாதன் என்ற ஆசிரியர், பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு முழு போதையில் வந்த விளையாட்டு ஆசிரியர் ரஜினிகாந்த் என்பவர் வகுப்பறையில் படுத்து உருண்டபடியே இருந்தார். இதை கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
இதனையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரிலும், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் லதா பரிந்துரையின் பேரில், முதன்மை கல்வி அதிகாரி ஏஞ்சனோ இருதயராஜ், ஆசிரியர் ரஜினிகாந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com