யம்மி யம்மி.. மாம்பழ புட்டிங் கேக்..

கேக் வகைகளிலேயே புட்டிங் கேக் தனி சுவை.. அனைவரும் சாப்பிடக்கூடிய புட்டிங் கேக் பல பிளேவர்களில் செய்யலாம்.. அதில் இன்று நாம் பார்க்க இருப்பது மாம்பழ புட்டிங் ரெசிபி..

 

சமைக்க தேவையானவை:

 நல்ல தரமான நன்கு பழுத்த மாம்பழம் பெரியது - 1 டின் பால் (மில்க்மெய்டு) - 1 கப் ரெடிமேட் வெஜிடேரியன் கேக் சதுரமாக - 6 துண்டுகள். கெட்டிப் பால் - 1 கப் (முழு க்ரீம் பால்) அலங்கரிக்க பாதாம், பிஸ்தா சீவியது - தேவைக்கு பொடியாக நறுக்கிய மாம்பழத்துண்டுகள் வெண்ணெய் - 1 டீஸ்பூன்.

உணவு செய்முறை:

முதலில் பாலை சுண்டக் காய்ச்சவேண்டும் . பின் கெட்டியாக வரும்போது டின் பாலை சேர்த்து சிறிது நேரம் காய்ச்சி இறக்கவேண்டும் .

ஒரு மாம்பழத்தில் பாதியை அலங்கரிக்க வைக்கவேண்டும் .பின் மீதி பாதியை துண்டுகள் போட்டு மிக்சியில் அடித்து விழுதாக எடுத்து, பின் இறக்கி வைத்த பால் கலவையில் சேர்த்து கலக்கவும்.

இப்போது ஒரு கண்ணாடி டிரேயில் சிறிது வெண்ணெய் தடவி கேக்கை சதுரமாக வெட்டி அதில் அடுக்கி வைக்க வேண்டும் , பின் அதன் மேல் இந்த மாம்பழம், க்ரீம் பால், டின் பால் கலவையை ஊற்றவும்.

பிறகு அதன் மேல் மாம்பழத் துண்டுகள் , சீவிய நட்ஸ் தூவி அலங்கரித்து ஃப்ரிட்ஜில் 1 மணி நேரத்திற்கு குளிர வைத்து பின் பரிமாறவும்..

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>