8 மாதத்துக்கு பிறகு சமந்தா பங்கேற்ற படப்பிடிப்பு.. இயக்குனரிடம் தமாஷ்..
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். இப்படம் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்பு தொடங்கியபோது விஜய் சேதுபதி எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் நடித்து வந்தார். விக்னேஷ் சிவன் ஒடிடி தளத்திற்காக ஒரு படத்தில் பணியாற்றி தந்தார். லாபம் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு விக்னேஷ் சிவன் படத்துக்காக விஜய் சேதுபதி ரெடியானார். இதையடுத்து கடந்த வாரம் படப்பிடிப்பு தொடங்கியது. விஜய் சேதுபதி கலந்துகொண்டு நடித்து வந்தார். தற்போது விஜய் சேதுபதி சமந்தா சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டது. இதன் படப்பிடிப்புக்காக காத்திருந்தார் சமந்தா. அவர் இன்று ஐதராபாத்தில் தொடங்கிய இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
படப்பிடிப்பில் பங்கேற்க மேக் அப் அணிந்து தயாராகிக் கொண்டிருந்த சமந்தாவுக்கு விக்னேஷ் சிவன் பூங்கொத்து கொடுத்து படப்பிடிப்புக்கு வரவேற்றார். அவரிடம், 'ஷூட்டிங் சீக்கிரம் முடிச்சி டுவீங்கிலா என்று சமந்தா கேட்க, தெரியலே நீங்க வாங்க பாப்போம். 10 நிமிஷத்தில் ரெடியாகிவிட்டு வாங்க அதற்குள் எல்லா ஏற்பாடும் செய்து வைக்கிறேன் என்று விக்னேஷ் சிவன் கூறினார். இந்த காட்சி வீடியோவாக வெளியாகி இருக்கிறது. அதில் சமந்தா, காத்து வாக்குல ரெண்டு காதல் இன்றைக்கு ஷூட்டிங் ஆரம்பம் என்கிறார். இப்படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார். அவர் தற்போது அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருக்கிறார். ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடக்கும் ஷூட்டிங்கில் ரஜினியுடன் கலந்துகொண்டு நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பை முடித்த பிறகு நயன்தாரா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் பங்கேற்க உள்ளார்.இப்படத்தையடுத்து நயன்தாரா நெற்றிக்கண் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது.
அதன்பிறகு அவர் புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார். சமந்தாவும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே சமந்தா ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் படங்களில் நடிக்காமல் விலகி இருப்பதுபற்றி தெரிவித்திருந்தார் சமந்தா. அந்த திட்டத்தை இப்படத்துக்கு பிறகு செயல்படுத்தலாம் என்று தெரிகிறது. முன்னதாக் சமந்தா கொரோனா ஊரடங்கில் 7 மாதமாக வீட்டில் இருந்தார். அப்போது அவர் காஸ்டியூம் டிசைனிங், சத்துள்ள உணவு சமைப்பது பற்றி படிப்பை படித்து முடித்தார். கடந்த மாதம் அவர் கணவர் நாகசைதன்யாவுடன் மாலத்தீவுக்கு விடுமுறை பயணம் சென்று அங்கு ஒரு வாரம் தங்கி இருந்துவிட்டு ஐதாராபாத் திரும்பினார். கொரோனா ஊரடங்கால் 8 மாதம் கழித்து சமந்தா தற்போது படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார்.