மின்னல் வேகத்தில் ஆர்யா பட ஷூட்டிங்கை முடித்த இயக்குனர்..
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித் அப்படங்களுக்கு பிறகு 2 வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார். இதற்கிடையில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு ஆகிய படங்களைத் தயாரித்து வந்தார். கடந்த ஆண்டு வடசென்னையை மையமாக வைத்து புதிய படம் இயக்க முடிவு செய்தார். அதற்கான ஸ்கிரிப்ட் ரெடியானதும் நடிகர் ஆர்யாவை ஒப்பந்தம் செய்தார். அந்த காலத்தில் வடசென்னையில் பாக்ஸிங் பிரதான போட்டியாக நடை பெற்றது. அதை மையமாக வைத்து அமைக்கப்பட்ட இப்படத்துக்கு சார் பட்டா பரம்பரை என பா.ரஞ்சித் பெயரிட்டார்.
இதில் நடிப்பதற்காக ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுமஸ் தாக்கினார். படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு படப்பிடிப்பைத் தள்ளிப்போட வைத்தது. 7 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. மின்னல் வேகத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. பாக்ஸிங் ரிங்கில் ஆர்யா மோதிய ஸ்டண்ட் காட்சிகள் ஆக்ரோஷமாக படமாக்கப்பட்டது. ஆர்யாவுடன் கலையரசன், சந்தோஷ்பிர்தாப் ஆகியோர் மோதிய காட்சிகள் படமாகின. இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். துஷாரா ஹீரோயினாக நடிக்கிறார்.
சார்பட்டா பரம்பரை படப்பிடிப்பை முடித்த படக்குழு நினைவுநாளில் கேக் வெட்டி கொண்டாடினர். அடுத்த கட்டமாக போஸ்புரடக்ஷன் பணிகள் தொடங்குகிறது. மார்ச் மாத்துக்குள் இப்படத்தை வெளியிட எண்ணி உள்ளனர்.பா.ரஞ்சித் மீண்டும் ரஜினியுடன் இணைவார் கபாலி படத்தின் 2ம் பாகம் இயக்குவார் என்று கபாலி வெளியானபோது தகவல் பரவியது. ஆனால் அது நிறைவேறவில்லை. இந்த மாதம் ரஜினி புதிய கட்சி தொடங்குவதுபற்றிய தேதி அறிவிக்க உள்ளார். ஜனவரி மாதம் கட்சி தொடங்குகிறார். தேர்தல் மற்றும் கட்சி பணிகளில் ஜனவரி மாதம் முதல் ரஜினி ஈடுபட உள்ளதால் அடுத்த படம் நடிப்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதில் கபாலி2ம் பாகத்துக்கு நடிக்க அவருக்கு நேரமிருக்காது என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.