மோடியை தூற்றியதாகக் குற்றச்சாட்டுhellip ஜிக்னேஷ் மேவானி மீது வழக்குப்பதிவு!
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, மோடியை தூற்றியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்னாடாகவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு போட்டியிடும் கட்சிகளுக்கு இடையே பிரசாரம் சூடுபிடித்துள்ளது. களத்தில் பிரதானமாக இருப்பது தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க-வும்தான்.
அவர்கள் இருவருக்கு மத்தியில்தான் போட்டி அதிகமாக இருக்கும் என்றும் ஆருடம் கூறப்படுகிறது. அதே நேரத்தில், குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி பா.ஜ.க-வுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சமீபத்தில் கர்னாடகாவின் சித்ராதுர்கா தொகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருக்கும் போது, `வரும் ஏப்ரல் 15-ம் தேதி மோடி கர்னாடகாவுக்கு பிரசாரம் மேற்கொள்ள வருவதாக தெரிகிறது.
அப்போது, இளைஞர்களான நீங்கள், அந்தக் கூட்டத்துக்கு சென்று நாற்காலிகளை தூக்கி எறிந்து அமளி செய்யுங்கள்’ என்று பேசியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. மேலும், இந்த குற்றச்சாட்டின் பேரில் தேர்தல் ஆணையம் நான்கு பிரிவுகளுக்குக் கீழ் மேவானி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. அடுத்த மாதம் 12-ம் தேதி கர்னாடகாவில் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com