வெற்றிமாறனின் படம் ஒடிடியில் வெளியாகிறது..
நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக்கதைகள்” திரைப்படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” பகுதி வெளியிடுகிறது.சமீபத்திய தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவக் கதைகள்” படத்தினை நெட் ப்ளிக்ஸ் தயாரிக்கத் தமிழின் விருதுகள் வென்ற இயக்குநர்களான சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.
காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நான்கு அழகான கதைகளின் வழியே சொல்கிறது இப்படம். தமிழின் திறன்மிகு இயக்குனரான வெற்றிமாறன் இயக்கிய “ஓர் இரவு” சுமதி எனும் இளம்பெண் கர்ப்பமாக இருப்பதை, அவளது குடும்பம் அறிந்த பிறகு, அவள் குடும்பத்தினருடன் அவளுக்கு ஏற்படும் சிக்கல்களை, போராட்டத்தைச் சொல்லும் கதையாகும். அவளது தந்தை, அவளை ஏற்று கொண்டு, குழந்தையைக் குளிப்பாட்டும் சடங்கை நடத்த, அவளை வீட்டிற்குக் கூட்டி வருகிறார். ஆனால் வீட்டில் நடக்கும் சம்பவம் அவளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
“ஓர் இரவு”படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது:ஒரு தந்தைக்கும், மகளுக்குமான எளிய உறவு, வாழ்வின் பயணத்தில் எப்படி தடம் மாறுகிறது என்பதே கதை. எனது உள்ளுணர்வு சொல்ல விரும்பியது, கௌரவம் எனும் பெயரில் சமூககத்தில் குடும்ப அங்கம் ஒருவர் மீது ஒருவர் எத்தனை பெரிய வலியை உண்டாக்குகிறார்கள் என்பதே. “ஒர் இரவு” நம் சமூகத்தில் தற்போதும் நிலவிக்கொண்டிருக்கும் மூடத்தனத்தை, ஞாபகப்படுத்தும். அது நம் இதயத்தை சுக்குநூறாக்கி, வெட்கப்படவைக்கும். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூ வாலா வின் ஆர்.எஸ்விபி மூவிஸ் (RSVP Movies) நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் ஃப்ளையிங் உனிகார்ன் எண்டர்டெயின்மெண்ட் (Flying Unicorn Entert ainment)நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடு களில் ப்ரத்யேகமாக வெளியிடுகிறது.
“பாவக்கதைகள்” திரைப்படம் டிசம்பர் 18, 2020 அன்று நெட்பிளிக்ஸில் தளத்தில் வெளியாகிறது. RSVP நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்பது நாம் இங்குச் சொல்லப்படாத, சொல்லப்படவேண்டிய கதைகளை உருவாக்குவதும், நாம் சொல்ல ஆசைப்படும் கதைகளை, மக்கள் தியேட்டர் சென்று பார்க்க ஆசைப்படும் கதைகளை உருவாக்குவதும் ஆகும். இன்றைய இளைஞர் கள் இணையவெளியில் தாங்கள் பார்க்கும் கதைகளில் நிறைய தேர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். ரசிகர்களின் இந்த எழுச்சியை, இந்த வளர்ச்சியை டெக்னாலஜியை தாண்டி நாம் மதிக்க வேண்டும். நமது நோக்கம் அவர்களுக்கான கதைகளைத் தொடர்ந்து புதிதாக, வித்தியாசமாக திரை தளத்திலும் டிஜிட்டல் தளத்திலும் உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதாகும்.