மதுரையில் எய்ம்ஸ் தமிழக அரசு மத்திய அரசுக்கு நிலத்தை ஒப்படைக்கவில்லையாம்..

மதுரை தோப்பூரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கத் திட்டமிடப் பட்டது. இதற்காகக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் பணிகள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் திட்டமிட்டபடி அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டு முடிவடையும் நிலையில் நிலையில் இதுவரை கட்டுமான பணிகள் எதுவும் துவங்கப்படவில்லை.

இந்நிலையில் எய்ம்ஸ் அமைவது குறித்து சமூக ஆர்வலர் தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாண்டிய ராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது.அதில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை இன்னும் மாநில அரசு மத்திய அரசிடம் வழங்கவில்லை. மேலும் ஜப்பான் ஜைக்கா நிறுவனங்களிடையே கடன் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை எனவும் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கிடைக்கப்பெற்ற பின்னர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>