கேரளா ஸ்டைல் தேங்காய் சிக்கன் கரி குழம்பு செய்வது எப்படி??
தேங்காயில் செய்யப்படும் சிக்கன் கறி ஒரு கேரளா மக்கள் செய்யும் ரெசிபி ஆகும். இதை எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்..
தேவையான பொருள்கள்:-சிக்கன்-1 கிலோக்ரீம்-2 கப் தேங்காய் பால்-2 கப் வெங்காயம்-2இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன் மஞ்சள் தூள்-1 ஸ்பூன் உப்பு-தேவையான அளவுகரம் மசாலா-1 ஸ்பூன் வெண்ணெய்-100 கிராம்மிளகாய் தூள்-1 ஸ்பூன்
செய்முறை:-ஒரு கிண்ணத்தில் சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா, மஞ்ச தூள், மிளகாய் தூள் ஆகியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
இதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். கடைசியில் க்ரீம் மற்றும் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும். சூடான, காரசாரமான தேங்காய் சிக்கன் தயார்.