அஜித்தை நினைத்து உருகும் மலையாள நடிகர் வினீத்!
2000-ம் ஆண்டில் முதன்முதலாகச் சந்தித்தபோது தன்னுடன் பேசியதை, 18 வருடங்களுக்கு பிறகு இப்போதும் மறக்காமல் அஜித் நினைவுபடுத்தியதை எடுத்துக் கூறி மலையாள நடிகர் வினீத் ஸ்ரீநிவாசன் பிரமித்துள்ளார்.
மலையாளத்தின் இளம் இயக்குநரும், நடிகருமான வினீத் ஶ்ரீனிவாசன் ரஜினி மற்றும் அஜித்தின் தீவிர ரசிகர். இந்நிலையில், வினீத் ஶ்ரீனிவாசன் சமீபத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று நடிகர் அஜித்தை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பதிவிட்டுள்ள அவர், "அல்டிமேட் ரசிக தருணம் இது. என்னைப்பற்றி தெரிந்தவர்களுக்குத் தெரியும் இது எனக்கு எவ்வளவு முக்கியமான நிகழ்வு என்று' என பரவசத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2000-ம் ஆண்டில் முதன்முதலாகச் சந்தித்தபோது தன்னுடன் பேசியதை, 18 வருடங்களுக்கு பிறகு இப்போதும் மறக்காமல் அஜித் நினைவுபடுத்தியது தன்னை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டுசென்று விட்டது எனவும் வியந்து பேசியுள்ளார் வினீத் ஶ்ரீனிவாசன்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com