சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி?!
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது உள்ள ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் டிசம்பர் 31- ம் தேதியோடு முடிவடைகிறது. இதற்கிடையே, ஒடிசா, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகிய நிலையில், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மகேஸ்வரி சிக்கிம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கோசுவாமி, ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.