டிக் டாக் என்ற பெயரே நியாபகம் இருக்கக்கூடாது.. கொலேப் என்ற செயலியை களத்தில் இறக்கிய பேஸ்புக்!
வாஷிங்டன்: டிக் டாக் இடத்தை நிரப்ப முகநூல் நிறுவனம் கொலேப் என்ற செயலியைக் களத்தில் இறக்கியுள்ளது. இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களைச் சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சீன நிறுவனத்தின் டிக் டாக், விசாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது.
குறிப்பாக, செல்போனில் மூழ்கி போன குடும்ப பெண்கள், இளைய தலைமுறையினரின் குற்றச் செயல்களுக்கு வழிவகுத்த டிக் டாக் தடை விதிக்கப்பட்டதற்குப் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், டிக்டாக் இடத்தை நிரப்ப பல்வேறு நிறுவனங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது, முன்னணி சமூக வலைத்தளமான முகநூல் டிக்டாக் இடத்தை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தன்னுடைய நிறுவனமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய தேவையை அறிமுகப்படுத்தியது.
இருப்பினும், டிக் டாக் அளவிற்கு ரீல்ஸ் பொதுமக்கள் மத்தியில் சென்றடையவில்லை. இதனால், டிக் டாக் என்ற பெயரை இந்திய மக்கள் மனதில் இருந்து நிக்க கொலேப் என்ற செயலியை முகநூல் களத்தில் இறக்கியுள்ளது. கொலேப் செயலியை மேம்படுத்தும் வேலையிலும் முகநூல் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் iOS பயனாளர்களின் பீட்டா வெர்ஷனுக்கு மட்டுமே கொலேப் செயலியை முகநூல் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.