நியூசிலாந்து கேப்டனுக்கு மற்றொரு பொறுப்பு.. தந்தையானார் கேன் வில்லியம்சன்!
நியூசிலாந்து: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மூலமாக உலகளவில் கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து அணியின் கேப்டனாக உள்ளார். ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.இந்நிலையில், கேன் வில்லியம்சன் தனக்கும் தனது மனைவி சாரா ரஹீமுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பெண் குழந்தைக்குத் தந்தையான வில்லியம்சனுக்கு கிர்க்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மனைவியின் பிரசவத்திற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் பங்கேற்கவில்லை. மேலும் நாளை மறுநாள், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வில்லியம்சன் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.