தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு: முதல்வர் அறிவிப்பு

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த வீரர் சதீஷ் குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற வீரர்களில் இதுவரை மூன்று பேர் தங்கம் வென்றுள்ளனர். இதில், பளுதூக்குதல் போட்டியில் ஆடவர் பிரிவில் (77 கிலோ எடை) தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கம் வென்று சாதனை படைத்தார். அவர் மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து, தங்கம் வென்ற சதீஷ் குமாருக்கு ஜனாதிபதி மற்றும் தலைவர்கள் என பலர் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்கம் வென்ற சதீஷ் குமாரின் வெற்றியை கவுரவிக்கும் வகையில், அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் சதீஷ் குமாருக்கு அவர் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தில், “காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். தமிழக அரசு சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ரூ.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>