புதுசா வரப் போகுது ஒரு தமிழ் நியூஸ் சேனல்
ஹைதரபாத்தைச் சேர்ந்த அசோசியேட்டட் பிராட்காஸ்டிங் (ABCL) நிறுவனத்துக்குச் சொந்தமானது TV9 என்ற சேனல். இந்த நிறுவனம் தெலுங்கில் இரண்டு செய்தி சேனல்களையும், கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் தலா ஒரு சேனல் என மொத்தம் 8 செய்தி சேனல்களை நடத்தி வருகிறது.
பரபரப்பான செய்திகளுக்கு பெயர் பெற்றது இந்த TV9 சேனல். ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் நம்பர் 1 செய்தி சேனலாக ட விளங்கும் டிவி9 குரூப் விரைவில் தமிழில் ஒரு செய்தி சேனலை கொண்டு வரப் போகிறது.இதற்கான ஆயத்த பணிகளை ஏற்கெனவே இந்த நிறுவனம் துவங்கிவிட்டது.