ஆந்திரா ஏலூரில் மர்ம நோய்க்கு பூச்சி மருந்துதான் காரணமாம்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் கடந்த 4ஆம் தேதி அங்குள்ள மக்கள் ஒருவித மர்ம நோயால் பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்துள்ளார். பலர் விசித்திரமாக கூச்சலிட்டுக் கொண்டே நடுரோட்டில் மயங்கி விழுந்தனர் . ஒருசிலருக்கு வலிப்பு நோயும் ஏற்பட்டது ஏற்பட்டது. தினசரி 200 300 என்ற ரீதியில் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் எண்ணிக்கை பெருகியது. இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்ட 2 பேர் மரணமடைந்தனர். மர்ம நோய் காரணமாக பலர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த பாதிப்பிற்கு விவசாய நிலத்தில் பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்தே காரணம் என தெரியவந்துள்ளது.
இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு நிபுணர் குழு ஏலூரில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முதல்கட்ட முடிவுகளின்படி இந்த விசித்திர நோய்க்கு வயல்வெளியில் தெளிக்கப்பட்ட பூச்சி மருந்தே காரணம் என்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடலில் ஈயம் மற்றும் நிக்கல் எவ்வாறு கலந்தது , பூச்சி மருந்து கலக்கப்பட்ட தண்ணீரீலா, காய்கறிகள், அரிசியா என்பது குறித்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் எய்ம்ஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பரிசோதனை மையம் அமைக்க முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு. ஆந்திர மாநில முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட கமிட்டி அமைத்து மேற்கொண்டு நடவடிக்கை குறித்து இரண்டு நாட்களில் ஆய்வு அறிக்கை தயார் செய்யவும் முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார்.