திவாலாகும் இன்னொரு வங்கி!
கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசின் வங்கி சீர்த்திருத்த சட்ட திருத்தங்களுக்கு பின்னர், பல வங்கிகளில் நிதி பிரச்சினைகள் தலைதூக்க ஆரம்பித்தன. இதனால் வெகுஜன மக்கள் உட்பட , அந்தந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் செய்வதறியாமல் விழி பிதுங்கினார். பின்னர் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக வங்கிகள் ஒன்றினைக்கப்பட்டு, அவர்களின் பணத்திற்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்தது. அந்த வகையில் இந்தியன் வங்கியுடன், அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியும் இம்மாதிரியான நிதி நெருக்கடியில் சிக்கியது. அதன் விளைவாக இந்திய ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு, சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட DBS வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இந்த வகையில் மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி, கர்நாடகா, கோவா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் 137 கிளைகளை கொண்ட பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கி (PMB) நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீள முதலீட்டாளர்களிடம் இருந்து, விருப்ப மனு பெறப்பட்டது. இந்நிலையில் கடந்த செவ்வாய் உடன் இதற்கான தேதி முடிவடைந்த நிலையில், இதுவரை 4 நிறுவனங்கள் இதற்கு விணண்ப்பித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இந்த நான்கு விண்ணப்பங்களில் இருந்து ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கபடும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் விரும்பினால் வங்கியை சிறு நிதி நிறுவனமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
இதற்கான ஒப்புதலை RBI இடமிருந்து பெற வேண்டும். மேலும் இந்த நிறுவனம் மிகுதியான நட்டத்தில் உள்ளது. இதனை சரிசெய்ய குறைந்தபட்சம் 5850 கோடி தேவைபடும் என உத்தேசிக்கப்படுகிறது. மேலும் CAR (Capital Adequacy ratio) எனப்படும் மூலதன போதுமான விகிதத்தை 9 சதவீத அளவிற்கு கொண்டு வர குறைந்தபட்சம் ரூ.1000 கோடி வரை தேவைபடும். பின்னர் வாடிக்கையாளர்களை காப்பாற்றி கொள்ள மற்றும் வங்கியை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றி செல்ல ரூ.1000 கோடி நிதி உதவி தேவைப்படும். அதாவது இந்த வங்கியை வாங்க நினைக்க விரும்பும் நிறுவனம் குறைந்தபட்சம் ரூ.7000 கோடியை முதலீடு செய்ய வேண்டும்.