நடுரோட்டில் நடிகருக்கு லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை..

ஹாலிவுட்டில் காதல் ஜோடிகள் லிப் டு லிப் கொடுக்கும் காட்சிகள் பெரும்பாலான படங்களில் இடம்பெறுகிறது. அங்கிருந்து பாலிவுட் , கோலிவுட்டுக்கும் இந்த கலாச்சாரம் பரவிவிட்டது. கோலிவுட்டில் இதுபோன்ற காட்சிகள் படமாக்கும்போது அரங்கில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்தார். அதன்பிறகு இந்திக்குச் சென்றவர் அங்கு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். பாலிவுட்டிலிருந்து தற்போது ஹாலிவுட் படங்களுக்குச் சென்றிருக்கிறார். தி ஒயிட் டைகர்ம் வி கேன் பி ஹீரோஸ், தி மேட்ரிக்ஸ் மற்றும் டெக்ஸ்ட் ஃபார் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

டெக்ஸ்ட் ஃபார் லவ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது. இது 2016 ஆண்டு வெளியான ஜெர்மன் படமான எஸ் எம் எஸ் ஃபர் டிச் என்ற படத்தின் ரீமேக்காக ஆங்கிலத்தில் உருவாகிறது. சாம் ஹுயுகன் ஹீரோவாக நடிக்கிறார். லண்டன் வீதியில் ஹீரோவுக்கு பிரியங்கா சோப்ரா லிப் டி லிப் முத்தம் தரும் சூடான காட்சி படமாக்கப்பட்டது. இரவு நேரத்தில் பனி பிழிந்துக்கொண்டிருக்கிம் நிலையில் இப்படியொரு கிளுகிளுப்பான காட்சி படமாக்கப்பட்டது. திரையில் இக்காட்சி ரசிகர்களை ஈர்க்கும் என்கிறது படக் குழு. இதில் நடித்த பிரியங்கா சோப்ரா பிங்க் நிற காஸ்டியூம் அணிந்து தேவதைபோல் காட்சி தந்தார். நடிகருக்கு பிரியங்கா உதட்டு முத்தம் தரும் படங்கள் நெட்டில் வெளியாக வைரலாகி வருகிறது.

இப்படத்தில் நடிப்பதுபற்றி பிரியங்கா கூறும்போது,டெக்ஸ்ட் ஃபார் லவ் படத்தில் நடிப்பதில் பரவசமாக இருக்கிறேன். சாம் ஹுயுகன், செலைன் டியான் போன்றவர்களுடன் நடிப்பது எனக்குக் கிடைத்த கவுரவம் என்றார். சமீபத்தில் பிரியங்கா அமேசான் உடன் பல கோடி மதிப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் சிங்கர் நிக் ஜோனஸ் என்பவரை மணந்துகொண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டிலானார். அங்கிருந்தபடி ஹாலிவுட் படங்களில் நடிப்பதுடன் இந்தியாவிலிருந்து வரும் இந்தி பட வாய்ப்புகளையும் ஏற்கிறார். இந்தி படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து நடித்துவிட்டு செல்கிறார்.

More News >>