ராவணன் பற்றி பேசிய நடிகர் மீது வழக்கு..
சமீபகாலமாக மத விவாகாரங்களை சினிமாவில் காட்டும் போது அதற்கு கடும் எதிர்ப்பு வருகிறது. தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி இந்தி படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது, பின்னர் தீபிகா படுகோனே பேசிய பேச்சுக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் ராஜ மவுலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்திலிருந்து டிஸர் வெளியானது அதில் நடித்த ஜூனியர் என் டி ஆர் முஸ்லிம் தொப்பி அணிந்திருப்பது போல் காட்சி இடம் பெற்றிருந்தது. அதற்கு ஆதிவாசிகளும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்காட்சியை நீக்காவிட்டால் இயக்குனர் ராஜமவுலியை தாக்குவோம் என்று எச்சரித்தனர்.
பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் என்ற படம் தமிழ், தெலுங்கு. இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாக உள்ளது. ராமாயணத்தைப் பின்னணியாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். ராவணன் வேடத்தில் சயீப் அலிகான் நடிக்கிறார். சமீபத்தில் பேட்டி அளித்த சயீப் அலிகான்,ஆதி புருஷ் படத்தில் ராவணன் வேடம் ஏற்கிறேன். இதில் ராவணனனின் மனிதத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என்றார். இந்த பேச்சு சர்ச்சையானது. ராவணன் ஒரு அரக்கன் அவனை மனித உணர்வோடு காட்டுவதை ஏற்க முடியாது என்று சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து தனது கருத்தைத் திரும்பப் பெற்ற சயீப் அலிகான் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில் சிவில் கோர்ட் வழக்கறிஞர் ஹிமான்ஷு ஸ்ரீவஸ்த்தவ என்பவர் சயீப் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதில், நான் சனதான தர்மத்தை கடைப்பிடிக்கிறேன். அதில் ராமர் நல்லவர்களின் அடையாளமாகவும், ராவணன் அரக்கர்களின் அடையாளமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சய்ப் அலிகான் பேச்சு என் மனம் புண்படுத்தி இருக்கிறது. ராவணன் கதாபாத்திரத்தை நல்லவனாகக் காட்டவே இதுபோன்ற பேச்சு அமைந்துருக்கிருக்கிறது. சயீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஜவுன்பு கூடுதல் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடிகர் சயீப் அலிகான் இயக்குனர் ஓம் ராவுட் பெயர்களில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு வரும் 23தேதி விசாரணைக்கு வருகிறது.