சல்மான் கானுக்கு ஜாமின்!
மான் வேட்டையாடிய வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற நடிகர் சல்மான் கானுக்கு தற்போது ஜாமின் கிடைத்துள்ளது.
ஜோத்பூர் மத்திய சிறைச்சாலையில் இரண்டு இரவுகளை தண்டனைக் கைதியாகக் கழித்த நடிகர் சல்மான்கானுக்கு தற்போது ஜாமின் கிடைத்துள்ளது. இன்று காலையில் சல்மான்கானின் ஜாமின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து இன்று மாலையிலேயே சல்மான்கான் ஜோத்பூர் சிறையிலிருந்து வெளிவருவார். ஜாமின் வழங்கப்படுவதற்காக சல்மான்கானுக்கு 50ஆயிரம் ரூபாய் அபராதத் தொகையுடன் கூடிய சொந்த நிபந்தனையின் பேரிலான ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 25ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு பேர் ஷ்யூரிட்டி கையெழுத்திட்டு ஜாமின் பெறப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் நீதிமன்ற உத்தரவு ஜோத்பூர் சிறைச்சாலையை சென்றடைந்த பின் இரண்டு மணி நேர அவகாசத்தில் சல்மான் நிபந்தனை ஜாமினில் வெளியே வருவார். அவருக்கு இந்தியாவைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com