ஓசூரில் ரூ .2,400 கோடி முதலீட்டில் இ-ஸ்கூட்டர் தொழிற்சாலை: ஓலா நிறுவனம்

ஓலா நிறுவனம் ஓசூரில் இ-ஸ்கூட்டர் ரூ .2,400 கோடி முதலீட்டில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவ உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை ஓலா நிறுவனம் ஓசூரில் அமைக்க உள்ளது இதற்காக 2,400 கோடி ரூபாய் முதலீட்டில் விரைவில் தொழிற்சாலை துவங்க உள்ளது.இந்த தொழிற்சாலை மூலம் ஆண்டொன்றுக்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயார் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த தொழிற்சாலையைத் துவக்குவதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்ட் பேங்க் என்ற வங்கியின் ஆதரவுடன் ஓலா நிறுவனம் இந்தியாவை மின்சார வாகனங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசுடன் ஓலா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த தொழிற்சாலை தொழிற்சாலை துவங்கியதும் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஆரம்பத்தில் ஆண்டுக்கு 2 மில்லியன் ஸ்கூட்டர்களை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓலாவின் தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கான திட்டங்களை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இது ஓலாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் . நம் நாட்டிற்கு ஒரு பெருமைமிக்க தருணம். இது உலகின் மிக முன்னேறிய உற்பத்தி கேந்திரங்களில் ஒன்றாக இருக்கும். இந்த தொழிற்சாலை உலகளாவிய சந்தைகளைப் பூர்த்தி செய்யும் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளைத் தயாரிப்பதற்கான இந்தியாவின் திறமையையும் வெளிப்படுத்தும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

More News >>