`தலித்துகளுக்கு என்ன செய்தீர்கள்?- மோடியை துளைத்தெடுத்த பாஜக எம்.பி

மத்திய பாஜக அரசு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று இதுவரை எதிர்கட்சிகள் சொல்லி வந்த நிலையில், பாஜக எம்.பி ஒருவர் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேச நாகினா தொகுதியைச் சேர்ந்தவர் எம்.பி யஷ்வந்த் சிங். தலித்தான இவர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில், தலித்துகளுக்கு பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

இது தேசிய அளவில் பேசு பொருளாக மாறி வருகிறது. அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், `ஒரு தலித்தாக இருப்பதால், என் முழு திறனை கட்சியில் வெளிப்படுத்த முடியவில்லை. நான் எம்.பி ஆனதற்கு முழுக் காரணம் இட ஒதுக்கீடுதான்.

இந்த நாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் முன்னேறுவதற்கு முக்கிய ஊன்றுகோளாக இருப்பது இட ஒதுக்கீடுதான். ஆனால், உங்கள் தலைமையிலான பாஜக அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் நாட்டில் இருக்கும் 30 கோடி தலித்துகளுக்கு எதுவும் செய்யவில்லை’ என்று கொதி கொதித்துள்ளார்.

ஏற்கெனவே, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலித் எம்.பி ஒருவர் பிரதமருக்கு, `நாட்டில் தலித்துகளின் மாண்பை காப்பாற்றுங்கள்’ என்று கூறி பகிரங்கமாக கடிதம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில், மேலும் ஒரு தலித் எம்.பி இதே போன்றதொறு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது கவனம் பெறுகிறது.

 

More News >>