ஆபாச படங்களை காட்டி 5 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவான ஆசிரியர்..
தெலுங்கானாவில் 5 சிறுமிகளை ஆபாச படங்களை பார்க்க வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. தெலுங்கானா மாநிலம், பத்ராத்ரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு வயது 40 இருக்கும். அந்த பள்ளியில் படிக்கும் சிறுமியின் உடல் நிலை திடீரென சரியில்லாமல் போனது. அப்பொழுது சிறுமியின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதிக்கும் பொழுது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது பள்ளியில் பயிலும் 2 முதல் 6 ஆம் வகுப்பு சிறுமிகளான 5 பேரிடம் தலைமை ஆசிரியர் தவறான முறையில் நடந்து உள்ளார்.
சிறுமிகளை கட்டாயப்படுத்தி ஆபாச படங்களை பார்க்க வைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளை பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர். 5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தலைமை ஆசிரியர் மேல் போக்ஸோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர் தலைமறைவு ஆகிவிட்டார். போலீஸ் அவரை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தீவிரமாக தேடி வருகின்றனர். சமீப காலமாக சிறுமிகளுக்கு எதிராக பல அநியாயங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.