அவரைப்போல் அழகான நடிகரை பார்க்கவில்லை.. நடிகை சாய் பல்லவி நச் ரிப்ளை..
நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். அதில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்ததுடன் படமும் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து சாய் பல்லவிக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனாலும் அதை ஏற்காமல் டாக்டருக்கு படிக்க வெளிநாடு சென்றார். படிப்பை முடித்தபிறகு திரும்பி வந்தார். அப்போதும், அவருக்காக பட வாய்ப்புகள் காத்திருந்தன. பிறகு தேர்வு செய்து படங்களை ஒப்புக் கொண்டார். தமிழில் தியா படம் மூலம் அறிமுகமானார். அப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. பிறகு தனுஷ் ஜோடியாக மாரி 2 படத்தில் நடித்தார். இப்படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
தனுஷுடன் அவர் ஆடிய ரவுடி பேபி பாடல் யூடியூபில் அதிக பார்வையாளர்கள் பார்த்த பாடலாக இடம் பிடித்தது. இப்பாடலைப் பற்றி தனுஷ் மகிழ்ச்சியை பகிர்ந்த போது சாய் பல்லவியின் பெயரை குறிப்பிடவில்லை என்று சர்ச்சை எழுந்தது. தெலுங்கு படங்களில் தனக்கென ஒரு இடத்தை சாய் பல்லவி பிடித்திருக்கிறார். ஆனாலும் குறைந்த அளவிலேயே படங்களை ஒப்புக்கொள்கிறார். இதற்கிடையில் நெட் பிளிக்ஸ் தயாரிக்கும் பாவ கதைகள் படத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி. இதுதவிர மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கிறார். சாய்பல்லவி வெப் தொடர்களில் நடிப்பதால் அவர் தேசிய அளவில் பிரபலமாகி வருகிறார். சாய் பல்லவிக்கு முகத்தில் பருக்கள் இருக்கும்.
அவரை அழகி கிரீம் விளம்பரம் ஒன்றில் நடிக்க கேட்டு ஒரு நிறுவனம் அணுகியதுடன் பெரும் தொகை சம்பளமாக தருவதாக கூறியது. ஆனால் அழகு கிரீம்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி அந்த விளம்பரத்தில் நடிக்க மறுத்து விட்டார். இது அவருக்கு இன்னமும் பிரபலத்தை அதிக்கப்படுத்தித்தந்தது. சமீபத்தில் சேனல்களுக்கு சாய் பல்லவி பேட்டி அளித்து வருகிறார். ஒரு பேட்டியில் அவரிடம், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுடன் பணிபுரிவீர்களா? என்றதற்கு பதில் அளித்தார். அவர் கூறும்போது, மகேஷ்பாபுவுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்.
ஒரு நாள் அது நடக்கும். அவர் பார்ப்பத்தற்கு ரொம்பவும் பரவசம் ஏற்படுத்தும் அழகுடையவர். அவரைப் போல் அழகாக இன்னொருவரை பார்ப்பது முடியாத காரியம் என்று எண்ணுகிறேன். அவருடைய புகைப்படத்தை வைத்து அதை பெரிதுபடுத்தி பார்த்து எங்காவது அவருக்கு புள்ளிகள் இருக்கிறதா என்று பார்ப்பேன். அவரது தோல் அப்பழுக்கில்லாமல் எந்நேரமும் பளிச்சென்று இருக்கும் என்றார். மகேஷ்பாபு பற்றி சாய்பல்லவி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிய பதில் நெட்டில் வைராலாகி வருகிறது. மகேஷ் பாபு ரசிகர்கள் சாய்பல்லவியின் பதிலை பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.