தல நடிகரின் கெட்டப்பை மாற்றம் செய்த பிரபல ஹீரோ..
இந்தியில் வெளியான படம் பிங்க். இதில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடித்திருந்தனர். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து தமிழில் அஜீத்குமார் நடிக்க நேர் கொண்ட பார்வை என்ற படமாக உருவானது. இதில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் என தனது இயல்பான தோற்றத்தில் அஜீத் நடித்திருந்தார். அது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக அமைந்தது.தற்போது இப்படம் தெலுங்கில் வக்கீல் சாப் பெயரில் ரீமேக் ஆகிறது. தமிழில் அஜீத் ஏற்று நடித்த வேடத்தைத் தெலுங்கில் பவன் கல்யாண் ஏற்றிருக்கிறார்.
இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் பவன் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் படப்பிடிப்பிலிருந்து அவரது தோற்ற ஸ்டில் லீக் ஆனது. அதில் வழக்கத்தை விட இளமையான தோற்றத்தில் அவர் இருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அப்படம் வைரலாகி வருகிறது.
பவன் கல்யாண் சமீபத்தில் தனது அண்ணன் நாகபாபு மகள் நடிகை நிஹாரிகா திருமணத்தில் பங்கேற்க உதய்ப்பூர் சென்றார். திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு திரும்பி வந்த அவர் வக்கீல் சாப் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் பவன் இருப்பதை அறிந்து அவரது ரசிகர்கள் அவரை சந்திக்க வருகின்றனர். அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவரும் பவனுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.வக்கீல் சாப் படத்தில் பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் அவர் பவனை தாக்கி அரசியல் ரீதியாக பேசினார். பா ஜவுக்கு ஆதரவாகப் பவன் செயல்படுவதாக பிரகாஷ்ராஜ் கூறினார். அதற்கு பவனின் ரசிகர்களும் பவனின் அண்ணன் நாகபாபுவும் கடுமையாக பிரகாஷ் ராஜை தாக்கி மெசேஜ் வெளியிட்டனர். இந்நிலையில் பவன், பிரகாஷ் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள் வக்கீல் சாப் படத்தில் இருப்பதால் படக்குழு பரபரப்பில் உள்ளது.